BREAKING..!!!அறிமுகமானது டிஜிட்டல் ரூபாய்…!!! எல்லாரும் டிஜிட்டலுக்கு தயாராகுங்கள்…!!

 
டிஜிட்டல் ரூபாய்

 

நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பணபரித்தனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பெட்டி கடை முதல் வணிக வளாகம் வரை பொதுமக்கள் டிஜிட்டல் முறையிலேயே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்களின் மதிப்பில்  டிஜிட்டல் ரூபாயும் சில்லறை பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

டிஜிட்டல் ரூபாய்

 

இந்த அறிமுகமானது முதற்கட்டமாக எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய 4 வங்கிகளில் வர உள்ளதாகவும் இதைத்தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளும் இணைய இருக்கின்றன எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

டிடிஜிட்டல் ரூபாய்

அதன்படி தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய நகரங்களில்   டிஜிட்டல் ரூபாய்  சோதனை ஓட்டம் இன்று முதல் அறிமுகமானது. இதையடுத்து அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக  ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. முதற்கட்டமாக 1,2,5,10,20,50,100,200,500,2000 மதிப்பிலான டிஜிட்டல் ரூபாய்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

From around the web