ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல தடையா? ஓபிஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிஷ்ணமூர்த்தி ஆவேசம்

தேர்தல் அதிகாரியை சந்திக்க இருக்கும் 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர்
 
 
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
பன்னீர்செல்வம் அணியினர் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறுவதால் நாங்கள் செல்லவில்லை,

அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செல்ல கூடாதுயென  நீதிமன்ற உத்தரவோ அரசானையோ உள்ளதா என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார், தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி சென்றுள்ளதால்,  துணை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அதில் 26,27, தேதிகளில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது,  அன்றைய தினம் தங்கள் அணியினர்  பணியாற்றும் வகையில் 
 வாக்காளர் பெயர் சேர்ப்பு நீக்க மற்றும் திருத்த பட்டியலை ஓபிஎஸ் அணியினருக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை அலுவலகத்திற்க்கு மட்டும் வாக்காளர் திருத்த பட்டியலை அனுப்பியுள்ளனர், அங்கு ஓ பன்னீர்செல்வம் அணியினர் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கூறுவதால் நாங்கள் செல்லவில்லை, ஆகவே தங்கள் அணியினருக்கும் தேர்தல் ஆணையம் புகைபடத்துடன் கூடிய  வாக்காளர் திருத்த பட்டியலை வழங்க வேண்டுமெனவும், அதிமுக அலுவலகத்திற்க்கு 
ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்   யாரும் செல்ல கூடாது என எந்த ஆணையும் யாரும் பிறபிக்கவில்லை என்று கூறினார்.....

From around the web