அந்த அமைச்சரா? சொன்னதையும் செய்யமாட்டாரு... சொல்லாததையும் செய்யமாட்டாரு!? குமுறும் தொகுதிவாசிகள்!

 
அன்பில் மகேஷ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகனும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரனாகவும் அறியப்பட்டவர் பொய்யாமொழி. இவரது சித்தப்பா அன்பில் பெரியசாமியும் ஓர் அரசியல்வாதி. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் பொய்யாமொழி.

அன்பில்  மகேஷ்
இதெல்லாம் தெரிஞ்சது தானேன்னு சொல்றீங்களா? விஷயம் இருக்கு. மகேஷின் தந்தை மறைவிற்குப் பின் ஸ்டாலின் தன்னுடைய ஆருயீர் நண்பர் குடும்பத்தை தன்னுடைய பராமரிப்பிலேயே வளர்க்கத் தொடங்கினார். இரு குடும்பங்களுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் நட்பு தாத்தா அன்பில் பி. தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி தந்தையர் அன்பில் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின், இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளாக தொடர்கிறது. மகேஷால் முடியாதது எதுவுமில்லை என கூறும் வகையில் இருவருக்கும் ஃபெவிக்கால் பந்தம் நட்பு.

அதனாலேயே 2016ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்பொழுது திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 2021ம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வும் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கொடுத்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் தற்பொழுது தொகுதி மக்கள் இவருக்கு எதிராக போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள்.

அன்பில் மகேஷ் ஏ.ஆர். ரகுமான் சந்திப்பு!! புது அப்டேட்!!

அந்த போஸ்டரில் இவரை பொய்(யா)மொழி என ஏரிய பாஜகவின் தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்ன பொய் சொன்னாராம்? சர்வீஸ் ரோடு அமைத்து தருவேன் எனக் கூறி வாக்கு கேட்டார். அதை நிறைவேற்றவில்லை. அத்தோடு சாக்கடைக்கு தோண்டிய பள்ளத்தில் ஒருவர் விழுந்து இறந்தார். இதெல்லாம் இவருக்கு அழகா எனக் கேட்கின்றனர் தொகுதிவாசிகள்.
இவ்வளவு தானா? அவரு தான் சொன்னதையும் செய்யமாட்டாரு, சொல்லாததையும் செய்ய மாட்டாரேப்பா என சிரித்துக் கொண்டு கடக்கின்றனர் பக்கத்து தொகுதிவாசிகள். அதுவும் சரி தான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web