போட்றா வெடிய!! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

 
இந்தியா ஜிம்பாப்வே

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இந்தியா ஜிம்பாப்வே

இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பிராட் இவான்ஸ் 33 ரன்களுடன் (29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். எக்ஸ்டிரா வகையில் அவர்களுக்கு 9 வைடு உள்பட 25 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தவான் 81 ரன்களுடனும் (113 பந்து, 9 பவுண்டரி), சுப்மான் கில் 82 ரன்களுடனும் (72 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்பே பவுலர்கள் 21 வைடு உள்பட 29 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். 3 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

இந்தியா

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (ஆக். 20) பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறும். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் குவித்ததில் இந்தியாவின் சாதனையாக இது பதிவானது. இதற்கு முன்பு வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து 12 ஆட்டங்களில் வென்றிருந்தது. அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசிப்பது இது 8-வது நிகழ்வாகும். இதில் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஆட்டங்களும் அடங்கும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web