போட்றா வெடிய!! ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் கட்டாயம்!! அமைச்சர் அதிரடி!!

 
பொன்முடி

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வந்தனர். பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்த ஆலோசிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ  மாணவர்களுக்கு முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது

கலந்தாய்வு

அதன் அடிப்படையில் பொறியியல் படிப்புக்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இது குறித்து தற்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படிபொறியியல் இளநிலை படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை திட்டமிட்டபடி நடைபெறும். செப்டம்பர் 7ல் நீட் தேர்வு முடிவு வெளியிடப்படும். இதனையடுத்து பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும். செப்டம்பர் மாதம் இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! செப்டம்பர் 14ல் தரவரிசைப் பட்டியல்!
மேலும் பொறியியல் கலந்தாய்வை பொறுத்தவரையில் ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் . அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே 7.5% உள் ஒதுக்கீட்டை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் படிக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web