வெச்சு செய்யுறாங்க! இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்!

 
மின் கட்டண உயர்வு

தமிழகம் முழுவதும் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே ஒரு பக்கம் முறைப்படுத்தப்படாத வீட்டு வாடகை, காய்கறி, பெட்ரோல், பால் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய் என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனால் தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு அளித்தது.

இதனைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது. 

eb

இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 

மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் 2026 - 27 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

EB

புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 - 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 55 ரூபாயும்,  201 - 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 145 ரூபாயும்,  301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web