ஜெ. மரணம்! சசிகலா உட்பட நால்வர் குற்றம் செய்தவர்கள்! விசாரணைக்கு பரிந்துரைத்தது ஆறுமுகசாமி ஆனையம்!

 
ஆறுமுகசாமி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான  ஜெயலலிதா மரணம் குறித்த உண்மை நிலையை கண்டறிய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உருவாக்கப்பட்டது. சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆறுமுகசாமி  ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி அறிக்கை

இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேர் மீதும்  ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைந்துள்ளது.

ஆறுமுகசாமி

அத்துடன் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்தது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை பரிந்துரை செய்தது. ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை ஆஞ்சியோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆறுமுகசாமி அறிக்கையில் ஜெயலலிதா இறந்த தேதியே தவறு. 2016 டிசம்பர் 5ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்தநேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி  பிற்பகல் 3 மணி முதல் 3.50மணிக்குள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web