ஆன்மிக அன்பர்களுக்கு ஜாக்பாட்! இராமேஸ்வரம்... டூ காசி ஆன்மிக பயணம்! அரசு செலவில் இலவசமாக சென்று வரலாம்!

 
காசி

ஆன்மிக அன்பர்களுக்கு இது ஜாக்பாட் செய்தி தான். இராமேஸ்வரம் டூ காசி ஆன்மிக பயணத்தை அரசு செலவில் அழைத்துச் செல்கிறது. தமிழகத்தில் மூத்த குடிமக்களை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 200 பயனாளிகளை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

 காசி

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அவர்களது ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள்ளாக இருக்க வேண்டும் என்பதும் விதிமுறை. பத்து நாட்கள் பயணத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறும் இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காசி

இதனிடையே, தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் டிசம்பர் 19ம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது.

இலக்கியம், பழங்கால நூல்கள், ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. அரசின் இந்த அறிவிப்பால் ஆன்மிக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web