ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர்... ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...

 
ஜெயிலர்

கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.     அடுத்ததாக இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ என்றப் படத்தை தயாரித்து வருகிறார். இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர்

இந்த படத்தில் யோகிபாபு, வஸந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன், கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

நடிகர் ரஜினி

‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

From around the web