அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி காட்டிய ஜெயக்குமார்! அதிர்ச்சியடைந்த ஓ.பி.எஸ். தரப்பு!

 
ஜெயக்குமார்

அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்த உடனேயே ஜெயக்குமார் காட்டிய அதிரடியில் ஓ.பி.எஸ். தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழக தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதிமுக கட்சியின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு சட்டசிக்கல்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் ஜெயக்குமார்

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் புதிய நடைமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேலும் இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது. இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ஆர்.எஸ். பாரதி, பரந்தாமன், காங்கிரஸ் கட்சி சார்பாக தாமோதரன், நவாஸ், பா.ஜ.க.வில் இருந்து கரு. நாகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க. தரப்பில் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூட்ட அரங்கிற்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் வந்திருந்தனர்.

ஜெயக்குமார்

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான செல்வராஜ்  இருக்கைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பெயர் பலகையை ஜெயக்குமார் எடுத்து தங்கள் இருக்கைக்கு முன்பாக வைத்துக் கொண்டார். இதனால் ஆலோசனைக் கூட்டத்தில் திடீர் சலசலசப்பு ஏற்பட்டது. உள்கட்சி பூசல் காரணமாக நடந்த இந்த பிரச்சினையால் அப்பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் இருதரப்பினரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களால் எந்த பிரச்சினையும் எழாமல் தலைமை செயலக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web