மீண்டும் உயர்ந்தது ஆபரண தங்கம் விலை! சவரனுக்கு ரூ.80 உயர்வு!

 
தங்கம்

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. 

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நகைபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. 

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,854-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் உயர்ந்து, ரூ.3,862-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம்

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல், ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web