ஜாலி!! ட்ரூகாலருக்கு டாடா!! மொபைல் அழைப்புக்களை பெயருடன் பார்க்கலாம்!!

 
ட்ரூ காலர்


இன்றைய வாழ்க்கை முறையில் ஆறாம் விரலாய் அனைவரின் கையிலும் இருப்பது மொபைல் போன் தான். சாப்பாடு கூட இல்லாமல் இருக்கலாம். செல்போன் இல்லாமல் வாழவே முடியாது. மொபைலில்  வரும் அழைப்புகள், இதுவரை நாம் சேமிக்காத நம்பரைக் கொண்டிருந்தால், வெறும் போன் நம்பர் மட்டுமே செல்போன் முகப்பு பக்கத்தில் நமக்கு கிடைக்கும். அந்த எண்ணிற்கான நபரை தெரிந்து கொள்ள விரும்பினால், ட்ரூகாலர் செயலியை பயன்படுத்த வேண்டும். தற்போது அதற்கான மாற்று வழிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ளது. 

ட்ரூ காலர்


இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொலைபேசி அழைப்பை அழைக்கப்படும் நபருக்கு பெயருடன் காண்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல் படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது தற்போது தொலைபேசி அழைப்பில் அழைக்கும் நபர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்கு வசதியாக ட்ரூகாலர் உள்பட பல செயலிகள் இருக்கும் நிலையில் இந்த விதி அமல் செய்யப்பட்டால் அந்த செயலிகளின் தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 

girl mobile பெண் மொபைல், வாட்ஸ் அப் செல்போன்


பயனர்களிடம் இருந்து பெரும் கேஒய்சி தரவுகளின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க முடியும் என்றும் இதை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க வேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web