ஜாலி!! நாளை மறுநாள் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!!

 
உள்ளூர் விடுமுறை

இந்தியாவில் பல்வேறு வகையான கலாச்சார வழிபாடுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மாநில பண்டிகையாக ஓணம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கேரளாவில்  ஓணம்  10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இதனையொட்டி ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓணம்
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 2 ஆண்டுகளாக மிக எளிமையாக மட்டுமே கொண்டாடப்பட்டது. நடப்பாண்டில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது . இந்நாள் அறுவடை திருவிழாவாக வெகு சிறப்பாகவும், அதிக உற்சாகத்துடனும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 
ஓணம் பண்டிகை கேரள மக்கள் மட்டுமின்றி மலையாள மொழி பேசும் தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாகவும் இருந்து வருவதில் ஐயமில்லை.

ஓணம்

ஏற்கனவே ஓணம் பண்டிகைக்கு ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,ஈரோடு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓணம் பண்டிகையையொட்டி அதிகளவில் மக்கள் பூக்களை பயன்படுத்துவதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web