டி20 உலக கோப்பையில் இருந்து ஜோஷ் இங்கிலிஸ் விலகல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஆஸ்திரேலியா ஜோஷ்

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ், காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு மாற்றாக கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா

நமீபியா, யுஏஇ போன்ற அணிகள் எல்லாம் இலங்கை போன்ற திறமை வாய்ந்த கிரிக்கெட் அணிக்கு சவாலாக விளங்கும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினருக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிற நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

T20 World Cup: Super 12 – இன்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள்  மோதல்

அதன்படி காயம் காரணமாக தொடரில் இருந்து ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடினார். தனது அபார ஆற்றலால் அதிரடியாக விளையாடி 2 அரை சதங்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று வீரர் அணியில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web