இன்று மசூதியில் இந்து கடவுள் படங்கள் வழக்கில் தீர்ப்பு!! 144 தடை உத்தரவு அமல்!!

 
ஞானவாபி மசூதி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன் சிலையை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, வாரணாசி நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்தன. மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஞானவாபி மசூதி வக்பு வாரிய சொத்து என்றும் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்தார். மசூதி தொடர்பான விவகாரத்தை வக்பு வாரியம் மட்டுமே விசாரிக்க உரிமை உண்டு என வாதாடினார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயிலை இடித்துவிட்டுதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றார். 

144

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், தீர்ப்பை செப்டம்பர் 12-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இந்த சர்ச்சைக்குரிய வழக்கின் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 144 தடையுத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்து முஸ்லிம் மக்கள் கூட்டாக வசிக்கும் பகுதிகளில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கொடி அணிவகுப்புகளை நடத்தி, இந்து முஸ்லிம் இரு தரப்பினரையும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web