கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம்! இன்று முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 
ஸ்ரீமதி

தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்தும் அதனால் ஏற்பட்ட திடீர் கலவரம் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காவல் துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை மற்றும் அதனால் ஏற்பட்ட திடீர் கலவரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உள்துறை செயலர், தலைமை செயலாளர் இறையன்பு, கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்டாலின்

மேலும் கள்ளக்குறிச்சி வன்முறையின் போது கள ஆய்வுப்பணியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியை எப்போது திறப்பது? ஏற்கனவே அப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பது குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை  நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீமதி

இதற்கிடையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அது குறித்து அப்பகுதியில் பெரும் போலீஸ்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தை நாடிய மாணவியின் தந்தை ராமலிங்கம், தாங்கள் நியமிக்கும் மருத்துவ குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web