நடிகை குஷ்புவிடம் கனிமொழி எம்.பி., பகிரங்க மன்னிப்பு! யாராக இருந்தாலும் தப்பு தான்!

 
கனிமொழி குஷ்பு

யாராக இருந்தாலும், நானும் சரி.. முதல்வர் ஸ்டாலினும் சரி.. இதை அனுமதிக்க மாட்டோம் என்று தன் கட்சி நிர்வாகி தெரிவித்த கருத்துக்கு, நடிகை குஷ்புவிடம் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்பதாக தூத்துக்குடி எம்.பி., கழக துணை பொது செயலாளருமான கனிமொழி எம்.பி., ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு  குறித்து தி.மு.க. நிர்வாகி ஆபாசமாக கருத்து தெரிவித்ததற்கு தி.மு.க. எம்.பி. ட்விட்டர் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பெரும் சலசலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர்.சி உடல்நிலை குறித்து மனம் திறக்கிறார் குஷ்பு !

தி.மு.க. நிர்வாகி ஒருவர் அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக குஷ்புவும், பா.ஜ.க.வினரும் கொதித்தெழுந்தனர். குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, இதுதான் முதல்-வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி கேட்டிருந்தார்.


இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்கிறேன். மேலும் யாராக இருந்தாலும் இதுபோன்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற கருத்துகளை நானும், தி.மு.க. கட்சியும், தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை மன்னிக்க மாட்டார்கள்’’ என்று பதிவிட்டு பகிரங்கமாக குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அரசியல் கட்சிகள் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web