கன்னட திரையுலகினர் சோகம்… இயக்குனர் முரளி கிருஷ்ணா மரணம்…

 
முரளி கிருஷ்ணா

கன்னட திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு வயது 63. இவர்  இந்திய திரையுலகில் கதாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் பெற்றவர். இவர்  150 க்கும் அதிகமான தெலுங்குப் படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார். வர்த்த ரீதியில் வெற்றிப்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

முரளி கிருஷ்ணா

வழக்கறிஞராக இருந்து இயக்குனர் ஆன கே.ஆர்.முரளி கிருஷ்ணா  2019ம் ஆண்டு காரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.   இது தவிர இயக்கம் மட்டுமின்றி, பாலா நூகே, கர்ணனா சம்பது,  ஹ்ருதய சாம்ராஜ்யம், மற்றும் மராயி குடிகே  உள்பட பல படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிலையில் மூளை பாதிப்பு நோயால் அவர் அவதிப்பட்டார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.   

முரளி கிருஷ்ணா

இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். முரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு சககார நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது. அவரது இறப்பு கன்னட திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

From around the web