கரூர் எம்.பி.யை காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க... வைரலாகும் போஸ்டர்கள்!

 
ஜோதிமணி

கரூர் எம்.பி.யைக் காணவில்லை.. கண்டா வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடத்தி வரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் பங்கு கொண்டுள்ள கரூர் எம்.பி.யை காணவில்லை என்ற போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஜோதிமணி
கரூர் எம்.பி. ஜோதிமணி, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி நடத்தி வரும் ‘ஜோடா யாத்திரை’யில் அவருடன் பங்கேற்றுள்ளார். ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் தனது கட்சியினருடன் நடை பயணம் மேற்கொண்டு பலதரப்பட்டு மக்களை சந்தித்து  வருகிறார். தினந்தோறும் அதன் செய்திகளும், புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
ராகுல்காந்தி நடுரோட்டில் தண்டால் எடுத்தது, சிறுவனுடன் கை கோர்த்து நடந்து சென்றது, சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டது என பல சுவாரசிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

ஜோதிமணி

இந்நிலையில் கரூர் எம்பியான ஜோதிமணியை காணவில்லை என்றும், "கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க..." என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சி வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web