இன்று முதல் காவேரி பாலம் மூடப்படுகிறது! இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதியில்லை! மக்கள் அவதி!

 
காவேரி பாலம்

இன்று முதல் திருச்சி மாவட்டத்தின் பிரதான பாலமான காவேரி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களும் செல்ல அனுமதீல்லை.
திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பிரதான இணைப்பு பாலமாகவும் காவேரி பாலம் திகழ்கிறது. அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கும் பணிகள் நடைப்பெற்று வந்தாலும், முழு அளவில் பாலம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில், நேற்று திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி மஸ்தான் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா பிரதீப்குமார்,இ.ஆ.ப மாநகராட்சி ஆணையர் திரு.வைத்திநாதன் இ.ஆ.ப , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நேரு

எல்லாம் சரிங்க அய்யா மொதல்ல இந்த காவேரி பாலத்தையும் ஊரு முழுக்க குண்டும் குழியும் இருக்கும் சாலைகளையும் சீர் செய்யுங்க. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும் என சன்னமாக கூட்டத்தில் இருந்த ஒருவர் நடையைக் கட்டினார்.

பாலம் பராமரிப்பு

நிஜமாகவே... நிஜமாகவே திருச்சி மக்கள் காவேரி பாலம் குறித்து கண்ணீர் வடிக்கின்றனர். நாளொன்றுக்கு அத்தனை வாகனங்கள் கடந்து செல்கிற முக்கிய பாலம் அது.  இதோ... அதோ.. என்று அசுர கதியில் வேலைச் செய்வதாய் சொல்லப்பட்டாலும், இன்னும் தினத்தந்தி கன்னி தீவு போலவே காவேரி பாலத்துக்கு விடியல் கிடைக்காமலேயே இருக்கிறது என்கிறார்கள் திருச்சி  மக்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web