கைக்குழந்தை நரபலிக்காக கடத்தல்! இளம்பெண் வெறிச்செயல்!

 
ஸ்வேதா

பச்சிளங்குழந்தையை நரபலி கொடுத்து, இறந்து போன தன் தந்தையை உயிர்த்தெழ செய்யப் போவதாக கூறிய இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் போலீசார் பத்திரமாக குழந்தையை மீட்டனர். கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஓயாத நிலையில், தமிழகத்திலும் நரபலி கொடுக்கப்படுகிறதா என்கிற விவாதங்கள் எழுந்தது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அந்த இடத்தில் மஞ்சள், குங்குமம் தூவப்பட்டிருந்தது குறித்து தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, கார்கி பகுதியில் பிறந்து ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தை மாயமானது. இது குறித்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது குறித்த விசாரணையில் இறங்கிய போது அடுத்தடுத்து அதிர வைக்கும் விஷயங்கள் வெளிவந்தன. அதில் ஸ்வேதா (25) என்ற இளம்பெண் தன்னார்வலர் என்று குழந்தையின் பெற்றோர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் குழந்தைக்கு இலவசமாக மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளையும் தருவதாகக் கூறி குழந்தையின் பெற்றோரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

ஸ்வேதா

அதன் பின்னர் குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு ஸ்வேதா கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அவர்களும் ஸ்வேதாவை நம்பி குழந்தையை கொடுத்துள்ளார். கூடவே சந்தேகம் வராமல் இருப்பதற்காக குழந்தையின் உறவுக்கார பெண்ணை அழைத்து சென்ற ஸ்வேதா அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை மயங்க செய்துள்ளார். அதன் பின்னர் குழந்தையை ஸ்வேதா கடத்திச் சென்றார் என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஸ்வேதாவை தீவிரமாக தேடியுள்ளனர். ஸ்வேதா, குழந்தையை நரபலி கொடுப்பதற்காக கடத்திச் சென்றுள்ளார். புகார் கொடுத்த 24 மணி நேரத்தில், குழந்தையை நரபலி கொடுப்பதில் இருந்து போலீசார் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் குழந்தையை நரபலி கொடுத்தால் தனது தந்தை மீண்டு வந்து விடுவார் என்று ஸ்வேதா நம்பியதாக கூறப்படுகிறது.

க்ரைம்

ஸ்வேதா மீது ஏற்கனவே 2 கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் நரபலி கலாசாரம் தலைதூக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web