இன்று கோலாகலத் தொடக்கம் குறுநாடகத் திருவிழா!!

 
குறுநாடகம்

என்னதான் சினிமா, திரையரங்குகள், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர்கள் வந்த போதிலும் மேடை நாடகங்களுக்கு மவுசு தனி தான். இன்றைய திரைத்துறையினரில் பலர்  மேடை நாடகக் கலைஞர்கள் தான். அந்தந்த நேரத்தில் ஒப்பனை செய்து கதாப்பாத்திரங்களை கண்முன்னே கொண்டு வரும் கலைஞர்களை ரசிக்கும் ஒரு கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

மேடை நாடகம்

மேடை நாடகக் கலையை வளர்க்கும் வகையிலும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையிலும் 2002ல்  10 நிமிட நாடகங்களின் திருவிழா தொடங்கியது. இந்த குறு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் குறு நாடக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

மேடை நாடகம்
அந்த வகையில் நடப்பாண்டிற்கான தென்னிந்திய குறுநாடகத் திருவிழா  சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்க இருக்கும் திருவிழா,  நவம்பர் 27ம் தேதி வரை நடைபெறும்.  இந்த விழாவை பிரக்ருதி அறக்கட்டளை, புளு லோட்டஸ் அறக்கட்டளை, அலியான்ஸ் பிரான்செஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த நாடகத் திருவிழாவில் சுமார்  50 நாடகங்கள் வரை அரங்கேற்றப்படும். முதன்முதலாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலத்தில் நாடகங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web