இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு!!!

 
இல.கணேசன்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இல.கணேசன்

குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கு வங்க ஆளுநர் பதவியை ஜெகதீப் தங்கர் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திரௌபதி முர்மு

தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும், பாஜக எதிர்க்கட்சியாகவும் உள்ளது. பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் உரசல் போக்கு நிலவுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இந்த மோதல் உச்சம் கண்ட மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இந்நிலையில், இல.கணேசன் மற்றும் மம்தா இடையேயான உறவு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web