தாய்மார்களே உஷார்!! க்ரைப் வாட்டர் விஷத்திற்கு சமம்!! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

 
க்ரைப் வாட்டர்

இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பெற்றோர்கள் இருவருமே பணிக்கு செல்லும் நிலையில் குழந்தைகளை க்ரீச்களில் விட்டு மாலை பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது அழைத்து வருகின்றனர். அலுவலக பிரச்சனைகள், வீட்டு டென்சன், உடல்நிலை இவைகளால் வீட்டிற்கு வந்த பிறகும் குழந்தைகளை கவனிப்பதற்கான நேரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரங்களில் வீட்டுப்பணிகள், உடல் ஓய்வு இவைகளுக்கே முன்னுரிமை. இதனால் குழந்தை அழுதால் ஏன், எதற்காக அழுகிறது என யோசிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை.


வயிற்றுவலியாக இருக்கலாம் என அவர்களே முடிவு செய்து உடனே கிரைப் வாட்டரை கொடுப்பது தான் இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது. க்ரைப் வாட்டர் செரிமானத்தில் பிரச்சனை இருந்தாலோ, வயிற்றில் பூச்சிகள் இருந்தாலோ  அதை நீக்கிவிடும் என்பது அவர்களின் கருத்து. பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைக்கு வரை கிரைப் வாட்டர் வீட்டு வைத்தியம். பாட்டி உங்கம்மாவுக்கு  கொடுத்தா. என் அம்மா  எனக்கு கொடுத்தா. நான் உனக்கு கொடுக்கிறேன்.  இப்படி குழந்தையின் அழுகையை நிறுத்த அம்மாக்களின் உடனடி வைத்தியமாக இருந்துவரும்  கிரைப் வாட்டர் குறித்த  எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தரும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "  உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இந்த 2022 ஆண்டிலும் இந்த கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் மாறவில்லை. இது உடலளவில் எந்த பலனையும் அளிக்காது. செயல்படாததுடன் உடலுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது

.குட்நியூஸ்! தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா பரவாது!
தொடர்ச்சியாக இதை கொடுப்பதால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக இதில் கலக்கப்படும் ப்ரோனோபோல் என்பது அதிக நச்சுத்தன்மை நிறைந்த மூலக்கூறு . உண்மையில் கிரைப் வாட்டர் கொடுப்பது குழந்தைக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்" எனக்  குறிப்பிட்டுள்ளார்.
" ப்ரோனோபோல் என்பது, எடை இழப்பு, புற்றுநோய், ஏன் மரணத்தை கூட உருவாக்கலாம் என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். க்ரைப்வாட்டர்களை பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் பலவற்றில் இவை தடை செய்யப்பட்டவை. க்ரைப் வாட்டர் குடிக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை சரிவர அருந்த தடையாக உள்ளது. இதனால் க்ரைப் வாட்டரை தவிர்க்கவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web