பழம்பெரும் நடிகை ஜமுனா திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம் !!
பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், குழந்தையும் தெய்வமும், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பியில் பிறந்தவர் ஜமுனா. அவருக்கு 7 வயது இருக்கும்போது அவரின் பெற்றோர் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். ஆந்திராவுக்கு சென்ற பிறகு ஜமுனாவுக்கு நடிகையர் திலகம் சாவித்ரியின் நட்பு கிடைத்தது. 15 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார் ஜமுனா.
மா பூமி என்கிற மேடை நாடகத்தில் ஜமுனா நடித்ததை பார்த்து தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் தெலுங்கு தவிர்த்து தமிழ், இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், குழந்தையும் தெய்வமும், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கல்லூரி பேராசிரியர் ரமண ராவை கடந்த 1965ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வம்சி என்கிற மகனும், ஷ்ராவந்தி என்கிற மகளும் உள்ளனர். குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார் ஜமுனா. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக தன் வீட்டில் இன்று காலை உயிரிழந்தார். 86 வயதான ஜமுனாவின் கணவர் ரமண ராவ் கடந்த 2014ம் ஆண்டு மாரடைப்பால் உயிர் இழந்தார். அவருக்கும் வயது 86.
ஜமுனாவின் மரண செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பொது மக்கள் அஞ்சலிக்காக ஜமுனாவின் உடல் ஃபிலிம் சேம்பரில் வைக்கப்படுகிறது.அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
