தனிமையில் சந்திக்கலாம்! சபல புத்தியால் இளம்பெண்ணிடம் சிக்கித் தவித்த தொழிலதிபர்!

 
தொழிலதிபர் இன்ஸ்டாகிராம் க்ரைம்

சபல புத்தி ஆண்கள் இருக்கும் வரையில், பணம் பறிக்கிற கும்பல், சதுரங்க வேட்டையை நடத்திக் கொண்டு தான் இருப்பார்கள். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இது தொடர்கதையாக தான் செல்லும் போல. சபல புத்தியால், இளம்பெண்ணிடம் சிக்கிக் கொண்ட தொழிலதிபரைப் பற்றி தான் கேரள மாநிலம், திருச்சூர் முழுக்க பேச்சாக இருக்கிறது. தொழில் அதிபரை மிரட்டிய இன்ஸ்டா பெண் பிரபலம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமையில் சந்திக்க வரும்படி ஆசை வார்த்தை கூறிய இளம்பெண்ணை நம்பிய தொழில் அதிபர் சிக்கலில் மாட்டிக் கொண்ட சம்பவத்தில் 6 பேரை கேரள போலீசார் தட்டி தூக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் அதிபர்களை குறி வைத்து மோசடி கும்பல்கள் பல்வேறு வழிகளில் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன. அவர்கள் விடுக்கும் மிரட்டலுக்கு பயப்படும் தொழில் அதிபர்கள் தங்களது பணம், சொத்து உள்ளிட்டவற்றை இழந்து ஒரு கட்டத்தில் போலீசின் உதவியை நாடி வருவது அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை இதுபோன்ற மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இன்ஸ்டா

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற இளம் பெண்ணுடன் திடீரென்று பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து போனில் பேசுவது, வீடியோ கால் செய்வது என தங்களது நட்பை அதிகரித்துள்ளனர். இதன் விளைவாக தொழில் அதிபரிடம் அந்த பெண் தனது கணவர் துபாயில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை தனிமையில் வந்து சந்தியுங்கள் என்று ஆசை வார்த்தை பேசியுள்ளார்.

அதை நம்பிய தொழிலதிபரும், பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பல் தொழில் அதிபரை தாக்கியதுடன் ஆபாச வீடியோ, மற்றும் போட்டோக்களை மிரட்டி எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாத என்றால் எங்களுக்கு நீ பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றையும் அபேஸ் செய்து அவரை தாக்கியது. இன்னமும் பணம் வேண்டும் என்று அந்த மர்ம கும்பல் கேட்டதால், அவர்களை அழைத்துக் கொண்டு தொழில் அதிபர் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றார். 

செக்ஸ் பாலியல் க்ரைம் ஆபாசம் கற்பழிப்பு

அப்போது திடீரென்று காரில் இருந்து குதித்து தப்பிச்சென்றார். உடனடியாக பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்ற அவர் நடந்த அனைத்தையும் விரிவாக கூறி போலீசின் உதவியை நாடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து உஷாரான போலீசார், வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபரை மிரட்டி ஆபாச படம் மற்றும் புகைப்படம் எடுத்தவர்களை தேடி வந்தனர். இறுதியில் இன்ஸ்டாகிராம் பிரபலம் கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு, சரத் (24), அஜித் (20)வினய் ( 24) ஜிஸ்னு (20) உள்ளிட்ட 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

இதுபோன்ற மோசடியை வாடிக்கையாக கொண்ட இந்த கும்பல், வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் கிடைக்கும் நட்பை வைத்துக் கொண்டு யாரும் பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web