லிவிங் டூ கெதர் வாழ்க்கை! காதலன் செய்த வெறிச்செயல்! கதறியழுத தந்தை!

 
ஷ்ரதா அமீன் பூனம்வல்லா

இயந்திர உலகம்.. விரல் நுனியில் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கிற சாத்தான்களின் ஆசிர்வாதம். நூல் அனுமதிக்கிற உயரம் தான் பறக்க வேண்டும் என்கிற புரிதல் இல்லாத காத்தாடி வாழ்க்கை தான் பெரும்பாலான அடுத்த தலைமுறை யூத்களுக்கு வாய்க்கிறது. கேட்டதெல்லாம் கிடைக்கிற சுதந்திரம்... என் வாழ்க்கை... என் இஷ்டம்... என் சந்தோஷம்.. என்று வாழ்க்கையை தீர்மானிக்கிற திமிரையும் தருகிறது. 30 வயதைத் தொடுவதற்குள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து ஓய்ந்து போய் விடுகிறார்கள். அல்லது.. தற்கொலைச் செய்து கொள்கிறார்கள். இது இரண்டும் இல்லையென்றால் யாரையாவது கொலைச் செய்கிறார்கள்.

நவீன உலகில், இந்தியாவின் அடுத்த தலைமுறை வாழ தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. தினமும் நமது இணையதளத்தில் கொலை, தற்கொலைச் செய்திகளா என்கிற அயற்சி வருகிறது. ஆனாலும், தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் எங்கோ ஒரு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள்... அல்லது யாராவது வெறிப்பிடித்த இளைஞனால் கொல்லப்படுகிறாள்.

அரசோ.. பெற்றோர்களோ... ஆசிரியர்களோ.. கல்வி நிறுவனங்களோ.. இத்தனை செய்திகளை தினம் தினம்  படித்தும், பார்த்தும், கேட்டும் இது குறித்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கிறார்கள். நிஜமாகவே கல்வி நிறுவனங்களில் கவுன்சிலிங் தரலாம். அரசும், பெற்றோர்களும் இதைச் செய்யவே மாட்டார்கள். ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களால் மட்டுமே மாணவர்களை மீட்க முடியும்.. ஆனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பணம் பிடுங்குவதிலும், நெம்பர் 1 இடத்தைப் பிடிப்பதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றன. உங்கள் மாணவனோ, மாணவியோ நாளை இந்த சமுதாயத்தில் ஒருவராய் இருப்பார்கள். உங்கள் கல்வி நிறுவனத்தின் பெயரை உரக்கச் சொல்லி மகிழ்வார்கள். அவர்களின் எதிர்காலத்தில் கொஞ்சம் அக்கறைக் கொள்ளுங்கள். வெறும் படித்து, அதைப் பேப்பரில் வாந்தியெடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே மாற்றி வைக்காதீர்கள் என்று இவர்களிடம் யார் சொல்வது?

ஷ்ரதா அமீன்பூனம்வல்லா
இளைஞர்களுக்குலிவிங் டூ கெதர் வாழ்க்கையில், ஒரு கட்டத்தில் காதலி வெறுப்கைக் கிளப்ப, காதலியைக் கொன்று  32 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜுக்குள் வைத்திருந்து, ஒவ்வொரு துண்டாக வெவ்வேறு இடத்துல எறிந்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். காதலியைப் பார்க்காமலே காதல், பேசாமலே காதல், இலக்கிய காதல், காதலுக்காக உருகி உருகி பக்கம் , பக்கமாய் கவிதை எழுதுதல் காதல் கை கூட வில்லை எனில் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்ளுதல் என்ற நிலை மாறி விபரீதமான வன்மத்துடன் காதலின் நிலை மாறி வருகிறது. காதலியை ரயிலில் தள்ளி கொலை, காதலனுக்கு விஷம் வைத்து கொலை, கொலை செய்து விட்டு தற்கொலை போல் நாடகமாடியது , கூலிப்படையை ஏவி கொலை செய்தல் என சமீப காலமாக காதலில் விழுந்தவர்கள் பெரும் விபரீத போக்குடன் மாறியுள்ளனர். 

டெல்லியில் லிவ் இன் டுகெதரில் வாழ்ந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு, தொடர்ந்து 18 நாட்களாக தினசரி ஒவ்வொரு துண்டாக வனப்பகுதியில் புதைத்த கொடூர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டிய இளைஞர் பிரிட்ஜில் வைத்திருந்து தினசரி புதைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள மெஹ்ராலி வனப்பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு தினசரி சென்று ஒவ்வொரு துண்டாக பல்வேறு இடங்களில் காதலியின் உடலை அந்த இளைஞர் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

ஷ்ரதா அமீன்பூனம்வல்லா
மும்பையில் வசித்து வருபர் 26 வயது ஷ்ரதா. இவர் பன்னாட்டு நிறுவனக் கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். இவருடன் ஒன்றாக அதே நிறுவனத்தில் பணியாற்றியவர் அமீன் பூனாவல்லா. இருவரும் காதல்  விழுந்து லிவ் இன் டுகெதர் உறவில் வாழ முடிவு செய்தனர். அவர்களின் இந்த முடிவை  ஷ்ரதா தனது குடும்பத்தாரிடம் பகிர்ந்து அனுமதி கோரினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஷ்ரதா பூனாவல்லாவுடன் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் ஒரு அடுக்குமாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாகத் தங்கினார்கள்.

மேமாதம் முதல் ஷ்ரத்தாவின் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பெற்றோர் எத்தனையோ முறை அழைத்தும் பதில் தரவில்லை. இதன் பிறகு ஷ்ரத்தாவின் தந்தை அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றார்.  ஆனால் குடியிருப்பு பூட்டியிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஷ்ரதாவின் தந்தை மெஹ்ராலி போலீஸில்தனது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமீர்பூனாவல்லாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவன் கூறிய தகவலின் படி “ ஷ்ரதாவுக்கும், பூனாவல்லாகுக்கும் உறவு நன்றாக சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் ஷ்ரதா தன்னை திருமணம் செய்யும்படி பூனாவல்லாவிடம் கூறி, வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு  பூனாவல்லா சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டைகளும், சச்சரவுகளும் நிகழ்ந்துள்ளன. மே 18ம் தேதி ஷ்ரத்தாவை பூனாவல்லா கொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை மறைக்கும் வகையில் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார். அந்த ஃப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வைத்தார். தினமும் அதிகாலை 2 மணிக்கு 18 நாட்களாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக எடுத்து சென்று மெஹ்ராலி வனப்பகுதியில் பூனாவல்லா புதைத்துள்ளார். இதுபோன்று18 நாட்களாக 35 துண்டுகளையும் பூனாவல்லா புதைத்து முடித்துள்ளார் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web