ஜூலை 28ம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

 
சென்னை செஸ்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம்  10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முதலமைச்சர் தலைமையில் அமைத்து துறை அமைச்சர்களும் மேற்கொண்டு  வருகின்றனர்.  மேலும் ஓவ்வொறு மாவட்ட வாரியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்   போடியை ஒட்டி மாமல்லபுரத்தில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டு அனைத்து பணிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஏற்பாடுகள், அழைக்கப்படும் முக்கிய அழைப்பாளர்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், செஸ் ஒலிம்பியாட் தீபம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களுக்கும் ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web