தீபங்கள் ஏற்றும் திரு கார்த்திகை மாதம்... அகல் விளக்குகளில் அசத்துது திருச்சி!

 
அகல்விளக்கு

கார்த்திகை மாதம் என்றாலே தீபங்களும் நினைவுக்கு வந்து விடுகிறது. கார்த்திகை தீபத்தன்று, வீடுகள், கோயில்கள் முழுவதும் அகல் விளக்குகள், குத்து விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுவது சிறப்புக்குரியது. தற்போது கல் விளக்கு, பீங்கான் விளக்கு, மெழுகு விளக்கு என பல வகையான விளக்குகள் கடைகளில் கிடைத்தாலும், களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தீப வழி பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருச்சி, திருவானைக்கோவில் ’மேலக்கொண்டையம்பேட்டை'யில் தினமும் சுமார் ஆயிரம் விளக்குகள் வரை செய்கிறார்கள். இதன் மூலம் ரூ.500 லிருந்து ரூ.800 வரை லாபம் கிடைக்கிறது. திருச்சியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம், மலைக் கோட்டை, சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட கோயில்களில் இந்த அகல்விளக்குகள் அதிகம் விற்பனையாகின்றன. இத்தோடு அண்டை மாவட்டம் முழுவதும் நம்ம விளங்குகள் தாங்க அசத்தும் என்கிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் அதிகம் விளக்குகள் விற்பனையாகும் என்பதால் இப்போது மட்டும் தினந்தோறும் 1500 விளக்குகளுக்கு மேலாக தயாரிக்கிறோம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுணக்கமாக இருந்தது. ஆனால் இந்தாண்டும் அதிக விளக்குகள் உற்பத்தி செய்கிறோம். வெளி மாவட்டங்களுக்கும் விளக்குகள் செய்து தருகிறோம். ஆனால், அவர்கள் குறைந்த விலையே கொடுப்பதால் நிறுத்தி விட்டோம் என்கிறார்கள்.

அகல்விளக்கு

ஆண்டவனுக்கு பெருமையும் சிறப்பும் உரிய அகல் விளக்குகள் திருவானைக் காவல் பேட்டை பகுதியில் அதிக அளவில் தயார் செய்யப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள் ஆண்டு முழுவதும் வழக்கமான பணிகளுடன், அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டாலும், கார்த்திகை சீசன் சமயத்தில் கூடுதலாக தயாரிக்கின்றனர். 

இந்தாண்டு தீபத் திருவிழாவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொண்டயம்பேட்டை மண் பாண்ட தொழிலாளர்களிடம் பேசினோம். கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த பணியை செய்து வருகிறேன். அகல் விளக்குகள் தயாரிப்பது பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால், பல நாட்கள் ஆகும்.

கார்த்திகை

அகல் விளக்குகள் செய்ய ஒரு யூனிட் களி மண், எரி பொருள், வைக்கோல் எல்லாம் சேர்த்து ரூ.10 ஆயிரம் செலவாகும்... என்றவர் தொடர்ந்து கார்த்திகை மாதம் முடிந்து விட்டால் அடுத்து பொங்கல் பானை, விநாயகர் சிலை இப்படி வரிசையாக தொழிலுக்கு பஞ்சம் இல்லை. என்ன ஒண்ணு வருண பகவான் மனசு வைக்கணும் அவ்வளவு தான்.

தமிழக அரசு மழைக் கால நிவாரண நிதியாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூபாய்.5000 மானியம் கொடுத்து மிஷின் வழங்கி வருகிறது. அது எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதனை வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web