கண்டங்கள் தாண்டி மலர்ந்த காதல்..! கரம் கோர்த்தது தமிழகத்தில்!!

பிரான்ஸ்  நாட்டைச்  சேர்ந்த  மணமகளுக்கும்  தமிழகத்தை  சேர்ந்த  மணமகனுக்கும்  தமிழர்  முறைப்படி  காரைக்குடி அருகே  கோலாகலமாக  திருமணம்  நடைபெற்றது

 
காரைக்குடி திருமணம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரை சேர்ந்தவர்கள் தங்கராசு - மாணிக்கவள்ளி தம்பதியினர்.  இவர்களது மகன் தங்கராசு பிரான்ஸ் நாட்டில் தனது குடும்பத்துடன்  வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது  மகன் கலைராஜன்  அங்கு ரென் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தபோது, அதே கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயல் என்பவரை காதலித்துள்ளார்.

இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் தங்களது காதலை பெற்றோர்களிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர், இதையடுத்து  காதலி கயலுக்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் மீது கொண்ட தீராத காததால் தனது திருமணத்தை இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் தமிழ்நாட்டு கலச்சாரத்தில் நடத்த கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று இவர்களின் திருமணம் தமிழர் முரைப்படு கோலாகலமாக நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

From around the web