இன்று மாலையுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வு!!

 
பண்டாரி


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட முனீஷ்வர்நாத் பண்டாரியின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இவர் 1960-ல் ராஜஸ்தானில் பிறந்தார். அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டதுடன். பொறுப்பு நீதிபதியாகவும் பதவி வகித்தார்.

அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பதவியேற்று கொண்டார். அவருக்கு 62 வயது நிறைவடைவதை முன்னிட்டு இன்று மாலையுடன் முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

உயர்நீதிமன்றம்

இதற்கிடையில் முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெறுவதை முன்னிட்டு,  நாளை முதல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி செயல்படுவார் என்றும் அவர் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பல முக்கிய வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார். அதில் சில, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு,  கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா? மதம் முக்கியமா? என கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்நீதிமன்றம்

மேலும் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோயிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைக்க உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கி சென்னை தலைமை நீதிபதியாக  தனது பணியை சிறப்பாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web