இன்று முதல் மதுரை-கோவை பகல் நேர ரயில்!! பயணிகள் பெரும் உற்சாகம்!!

 
ரயில்

இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் மதுரை-கோயம்புத்தூர் இடையே பகல் நேர ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை-பழனி மற்றும் பழனி-கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் இரண்டு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களை இணைத்து இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்மீக ரயில்


அதன்படி 06479/06480 பழனி – மதுரை – பழனி 0முன்பதிவு இல்லாத விரைவு ரயில் மற்றும்  06462/06463 பழனி – கோயம்புத்தூர் – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில் இரண்டும் இணைக்கப்பட்டு மதுரை – கோயம்புத்தூர் விரைவு ரயில்  இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி மதுரை – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல்  12.45 மணிக்கு கோவை சென்றடையும். எண் 16721 கோயம்புத்தூர் – மதுரை எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து பிற்பகல்  2.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும்.

ரயில்
இந்த ரயில் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல் சந்திப்பு, அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணந்துக்கடவு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 12 பொது இருக்கை பெட்டிகள் மற்றும் 2 எஸ்எல்ஆர் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  பழனி-பொள்ளாச்சி ரயில்பாதை மாற்றும் பணிக்காக 2009ல் மூடப்பட்டு 2014ல் போக்குவரத்துக்காக  திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!