சோகம்!! மேட்டூரில் மின்வெளியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு !!

 
யானை உயிரிழப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் ஆலமரத்துபட்டி கிராமம் உள்ளதுஇந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதுஅடிக்கடி வனவிலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த  விவசாயி புஷ்பநாதன் தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி அதில் சட்ட விரோதமாக மின் இணைப்பு அமைத்திருந்தார்

நேற்று இரவு  சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட  வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை , புஷ்பநாதன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த  மின்சார கம்பியை மிதித்ததில் மின்சாரம்  ஆண் யானை  உயிரிழந்ததுஇது தொடர்பாக தகவல் அறிந்த மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோதமாகவிவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்த புஷ்பநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்மேலும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெளியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web