என்னை கல்யாணம் பண்ணிக்கோ!! கத்தியை காட்டி காதலிக்கு மிரட்டல்!!

 
கௌதம்

திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் கவுதம். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணின் அறிமுகம் பேஸ்புக் மூலம் கிடைத்துள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் காதலாக மாறியது.இந்நிலையில் திடீரென்று இளம்பெண் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கவுதமிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுதம் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இந்நிலையில் பொறுமையிழந்த கவுதம், இளம்பெண்ண வீட்டிற்கு கடந்த வாரம் நேரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கவுதம் தான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் கவுதம் மீது புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் கவுதமை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

கவுதம் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கவுதமை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பேஸ்புக் காதல் கைது வரை சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web