கார்களை திரும்ப பெறும் மாருதி நிறுவனம்.! அதிர்ச்சியூட்டும் காரணம்!!

 
மாருதி நிறுவனம்

இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால்  9,125 கார்களை திரும்ப பெறுவதாகவும்  தெரிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்த நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 9,125 வாகனங்களை திரும்பப் பெறுவதாக   அறிவித்துள்ளது.

மாருதி நிறுவனம்

இதில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்களில் சிக்கல் இருப்பதாகவும் இதன் காரணமாக அவற்றை திரும்ப பெறுவதாகவும்   தெரிவித்துள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் முன் வரிசை இருக்கை சீட்பெல்ட்களின் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் பாகங்களில் குறைபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணியும் போது வேலை செய்யாமல் போகவும், பயணிக்கும் போது சீட் பெல்ட் எளிதில் கழன்று விடவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி கார்

மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. காரில் சிக்கல் இருந்தால் பழுதடைந்த பகுதியை இலவசமாக மாற்றி தர முடிவு செய்திருப்பதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

From around the web