மாஸ் வீடியோ!! சிறையில் மசாஜ், சலுகைகள்!! அமைச்சரின் அலப்பறைகள்!!

 
சத்யேந்திர ஜெயின்

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இவர் மே மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஹவாலா பண மோசடி காரணமாக  அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத  ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் கடந்த 5 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சத்யேந்திர ஜெயின்

சிறையில் அவருக்கு சட்டத்திற்கு புறம்பாக விஐபி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது உறுதியானதும் திகார் சிறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.


ஆம் ஆத்மி அரசு தனது அமைச்சருக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் , குற்றவாளிக்கு சிறைக்குள்ளேயே விஐபி வசதிகளை செய்து தருவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த புகாரை முற்றில்லும்  மறுத்துள்ளது. மருத்துவரின் அறிவுரையின் பேரில் அமைச்சருக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகின்றன.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web