மோடி பெயரில் மருத்துவக் கல்லூரி!! அதகளப்படுத்தும் அரசியல் அடிப்பொடிகள்!!

 
மருத்துவ கல்லூரி

இந்திய பிரதமர் மோடி குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். அங்கிருந்து தான் தனது அரசியல் பணியை தொடங்கியவர். இரண்டாவது முறை இந்தியாவின் பிரதமரான பிறகு குஜராத்தில்  அவர் பெயரில் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், மருத்துவ கல்லூரிகளுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு வருகிறது. தற்போது குஜராத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் முதல்வராக பூபேந்திர பட்டே இருந்து வருகிறார்.

குஜராத்தில் திறக்கப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து குஜராத்தில் உள்ள அகமதாபாத் மணிநகர் பகுதியில் மருத்துவக் கல்லூரி ஒன்று மருத்துவ கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரிக்கு பெயர் மாற்றம் குறித்து முடிவெடுக்க அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு நேற்று கூடியது.


இந்த கூட்டத்தின் போது, அகமதாபாத் மாநகராட்சி நிலை குழுத் தலைவர் ஹிடேஷ் பரோட் கூறும்போது, ‘‘மருத்தவக் கல்லூரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட உள்ளது என்று தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய கிரிகெட் ஸ்டேடியம் குஜராத்தில்  இயங்கி வருகிறது. இதற்கு சர்வதார் வல்லபாய் பட்டேல் மைதானம் பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இதற்கு பிரதமர் மோடியின் பெயர் மைதானத்திற்கு பெயராக மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது மருத்துவ கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web