வாட்ஸ்-அப் மூலமாக மெட்ரோ ரெயில் டிக்கெட்! முதல் நாளில் 1,699 பேர் பயணம்!

 
மெட்ரோ ரயில்

வாகன நெரிசல், நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்வது, காற்று, ஒலி மாசு, எரிபொருள் சேமிப்பு என பல விஷயங்கள் மெட்ரோ ரயில் சேவையை நோக்கி பொதுமக்கள் அதிகளவில் ஈர்க்க துவங்கி உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்-அப் செயலி மூலமாக மெட்ரோ டிக்கெட்டுகளை எடுத்து பயணம் செய்யும் திட்டம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் இதுவரை 1,669 பயணிகள் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட்ரோ ரயில்
இந்தியாவின் பல முக்கிய மாநிலங்களில் தற்போது மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டது. பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு பயணிகள் வாட்ஸ் அப் செயலி மூலம் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய ஏற்பாடுள் செய்யப்பட்டன.

அதன்படி நேற்று முன்தினம் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரெயிலில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணித்தனர். நேற்று முன்தினம் ராஜ்யோத்சவா தினத்தில் 1,669 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் வாட்ஸ்-அப் டிக்கெட் மூலமாக பயணம் செய்துள்ளனர்.

பெங்களூரு மெட்ரோ

மேலும் பெங்களூருவில் தற்போது மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14,400 பயணிகள் அதிகரித்துள்ளதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web