மிக்- 21 போர் விமானம் கீழே விழுந்து கோர விபத்து! அமைச்சர் நாஜ்நாத் சிங் இரங்கல்!

 
மிக் 21 விமான விபத்து

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து, இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விமானத்தில் விமானிகள் இருவர் நேற்று வழக்கம் போல பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். 

அந்த விமானம் நேற்று இரவு 9.10 மணியளவில் பார்மர் என்ற பகுதிக்கு சென்றபோது,  திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிய தொடங்கியது. பல மணி நேரம் பற்றி எறிந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளூர் வாசிகள் திணறினர். கட்டுக்கடங்காமல் பற்றி எறிந்த தீயால் அந்த பகுதியே புகை மண்டலம் ஆனது. 


இந்த விபத்தில் இரு விமானிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தகவலை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், “விபத்தில் விமானிகள் உயிரிழந்தது பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக விமானப்படை நிற்கும். விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக மிக்-21 விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதரியிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையின் விமானி விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web