இன்று முதல் பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
அமுல் பால்

உலகில் மிகப்பெரிய அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக குஜராத்தை தலைமையிடமாக கொண்ட அமுல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 

அமுல் பால்

விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து உள்நாடுகளில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் அமுல் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. நாடு முழுவதும் மிகவும் பிரபலமான அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விலைப் பட்டியலின்படி, 500 மில்லி அமுல் கோல்ட் பால் இனி ரூ.35-க்கும், அமுல் தாசா ரூ.25-க்கும், அமுல் சக்தி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமுல் போல் மதர் டெய்ரி என்ற நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அமுல் பால்

மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பால் ஒரு லிட்டர் இனி ரூ.61-க்கு விற்பனை செய்யப்படும். டோண்ட் பால் ஒரு லிட்டர் ரூ.51-க்கு விற்பனை செய்யப்படும். டபுள் டோண்ட் பால் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும். பால் பூத்களில் விற்பனை செய்யப்படும் பால் லிட்டருக்கு ரூ.48 என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web