அமைச்சர் கே.என்.நேரு​​​​​​​ பிறந்தநாள்.. வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா... கண்ணா?!

 
நேரு ராமஜெயம்
-மகரன்

பூர்வீகம், கானாக்கிளியநல்லூர் காங்கிரஸ் குடும்பம், என்னவோ காங்கிரஸ் என்றாலும் திராவிடம் தோன்றுவதற்கு முன்பாக வேறு கட்சி ஏது? ஆகவே தந்தையின் சொல்லை மீறி திராவிடத்தில் தடம் பதித்தித்தார் கே.என்.நேரு. ஊரில் பெரிய மனிதர் என்றால் சிலை நிறுவுவது இயற்கை தானே? தனக்கு சிலை வைப்பார்களோ இல்லையோ நம்முடைய பெயரை ஊர் சொல்லும் விதமாக ஒரு தண்ணீர் தொட்டியை திறப்போம் என கருதிக் கொண்டிருந்த நிலையில் 1989ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தி தொட்டியை திறந்து வைக்க அந்த நிகழ்வை ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் சொல்ல அப்பொழுது உயர ஆரம்பித்த கிராஃப் அதன் பின் அரசியலிலும், கட்சியிலும், வளர்ச்சியிலும் சரிவையை காணவில்லை. கால் நூற்றாண்டுகளாக மாவட்டச் செயலாளர் கானா.

1989ல் முதன் முறையாக லால்குடியில் போட்டியிட முடி சூடினார். அதே தொகுதியில் தோல்வி.. மீண்டும் வெற்றி. சரி சரி இந்த சாதி விளையாட்டு நமக்கு சாதகமாக இருக்காது எனக் கருதியவர் சிட்டிக்குள் வந்தார். தொடர்ந்து வெற்றி முகம் தான்.

கே.என்.நேரு

தற்பொழுது கட்சியின் முதன்மைச் செயலளார். ஊராட்சித் துறை அமைச்சர். எப்படி ஏகப்பட்ட ஏற்றங்கள் என்ன விழாவாக வெளியூரில் இருந்தாலும் பிறந்த நாள் அன்று தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று அம்மாவிடமும் அக்காவிடமும் ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னர் தாயார் இறந்தாலும் கூட சசோதரியிடம் ஆசிர்வாதம் தொடர்கிறது. அதன் பின் நேரடியாக சிட்டிக்கு வந்து விடுவார். அங்கே முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு முடித்து விட்டு, கட்சி அலுவலகம் வருபவர் தொண்டர்களின் உற்சாகத்தில் திளைப்பார். இரவு கேர் கல்லூரிக்கு விஜயம் தன்னுடைய சசோதரர் ராமஜெயம் சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கிளம்பி விடுவார். பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த தொண்டர்கள் அனைவருக்கும் இரு வகையான பிரியாணி, இனிப்புகள் என அதகளப்பட்டது கட்சி அலுவலகம்.

அது சரி அப்படினா தலைவர்... தளபதி... அண்ணி...

அதெல்லாம் முதல் நாளே முடித்து ஆசி வாங்கிய பின்னர் தான் திருச்சி வருவார். அன்றே மீண்டும் தலை நகருக்கு கிளம்பி விடுவார். என்னய்யா நீ சொல்லற பார்த்தா அவ்வளவு வேகமா? படையப்பால ரம்யா கிருஷ்ணன் வசனம் தெரியும் இல்ல “வயசு ஆனாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல” என... அந்த வசத்தைக் கூறி தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து செல்கின்றனர்.

நேரு

ஆனால் ஒரு சோகம் ராமஜெயம் இறந்த ஆண்டு மட்டும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை. அதே போல அடுத்த தேர்தலோடு அவருக்கு தோளோடு தோளாக நின்ற ராமஜெயத்தின் சகலை மகன் வினோத் ஓரங்கட்டப்பட்டார். இப்பொழுது அவர்  மகன் அருண்நேரு களமிறக்கப்பட்டிருக்கிறார். திருச்சியே இன்று விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஹாப்பி பர்த் டே அமைச்சர் சார் !

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web