திருமதி உலக அழகி போட்டி!! விருதை தட்டிச்சென்ற தமிழக பெண்!!

 
பிளாரன்ஸ் ஹெலன் நளினி

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் பலர் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் தாய் ஒருவர் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு   எழுந்திருக்கலாம். அதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி.  கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  

பிளாரன்ஸ் ஹெலன் நளினி

ஹெலன் நளினி மன நல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பல துறைகளில் திறமை கொண்டவர். இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் பங்கேற்ற அவர் 'சர்வதேச மக்களின் தேர்வு' என்ற அழகி பட்டத்தை பெற்றார்.

பிளாரன்ஸ் ஹெலன் நளினி

இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'திருமதி இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' என்ற அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.