அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை!! வெளில போகும் போது குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

கேரளாவில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று நவம்பர் 16 முதல்  அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

நவம்பர் 20ம் தேதி  கடலோர  மாவட்டங்கள் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். மேலும் இன்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web