தமிழகம் வருகிறார் மோடி! ஒரே மேடையில் மோடி, ஸ்டாலின், ஆர்.என்.ரவி! வரலாறு காணாத பாதுகாப்பு!

 
மோடி ,ஸ்டாலின் , ஆளுனர்

இன்று தமிழகம் வருகிறார் இந்திய பிரதமர் மோடி. பெங்களூருவில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திண்டுக்கல் வந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதே விழாவில் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று நவம்பர் 11ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்கிறார். பின்னர், பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். 

மோடி ,ஸ்டாலின் , ஆளுனர்
இதனையடுத்து பெங்களூரு நகரத்தை உருவாக்கிய கெம்பேகவுடாவின் 108 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். அத்துடன் 2வது விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல்லில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். .  

விழா முடிந்ததும் தனி ஹெலிகாப்டரில் மீண்டும் மதுரை சென்று அங்கிருந்து மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் விசாகப்பட்டினம் செல்ல இருக்கிறார். பிரதமர் , கவர்னர், முதல்வர் மூவரும் ஒரே விழாவில் பங்கேற்பதால் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  விரிவான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமருக்காக குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்பட்டுள்ளது. அவருக்காக சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் நேற்று கோவை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  திமுக பிரமுகரின் இல்ல விழாவில் கலந்து கொண்டார். இன்று நவம்பர்11ம் தேதி காலை, கரூரில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்களுக்கான உத்தரவுகளை வழங்க இருக்கிறார்.

இந்த விழாவிற்கு பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து திண்டுக்கல் சென்று  பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்கிறார். அதே போல கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் செல்ல இருப்பதாக இவரது பயணக் குறிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web