இன்று தமிழகம் வருகிறார் மோடி! இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

 
இளையராஜா

இன்று பிரதமர் மோடி தனி விமானத்தில் தமிழகம் வருகிறார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில், கெளர டாக்டர் பட்டத்தை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் வழங்குகிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 பேர் அமரும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மோடி

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சேர்ந்து பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனும் கவுரவ டாக்டர் பட்டம் பெற இருக்கிறார்கள். பிரதமரின் வருகையையொட்டி, நேற்று முதல் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளையராஜா

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழா அரங்கிற்குள் பாதுகாப்பு காரணத்துக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நாளை நவம்பர் 12ம் தேதி வழக்கம் போல, பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web