அதிர்ச்சி!! டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

இந்தியாவில்  குரங்கு  அம்மையால்  பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை  4 ஆக அதிகரித்துள்ளது.

 
குரங்கு அம்மை

குரங்கு அம்மை பாதிப்பு 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில், அதனை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவிக்கையில், உலகில், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது.இதனால் குரங்கு அம்மை நோய் பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 இந்நிலையில் இந்தியாவிலேயே  குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா  இருந்து வருகின்றதுஇதனால் இரு மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதன்படி விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை க்கு பிறகே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வரு கின்றனர். ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கிறது.

 இந்நிலையில் டெல்லியில் முதன்முதலாக ஒருவருக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 31 வயதான நோயாளி ஒருவர், காய்ச்சல் மற்றும் தோல் புண்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகிருப்பதை அடுத்து, இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

From around the web