மக்களுக்கு மேலும் அதிர்ச்சி.. தமிழகம் முழுவதும் பால் விலை மீண்டும் உயர்வு !

 
கனப

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் உள்ளது. இதனால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர். எனினும் அண்மையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. 

இதனிடையே, கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. இது நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையை கூட்டியுள்ளது. 

இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

பால்

தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயர்ந்துள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார்  பால் நிறுவனங்கள் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. 

From around the web