ஒரே நேரத்தில் 11,000க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம்! ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி!

 
பணி நீக்கம் வேலை ஊழியர்கள்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவதாக பேச்சு எழுந்ததில் இருந்தே லைம்லைட்டில் இருந்து வருகிறார் எலன். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேவையற்ற செலவீனங்களைக் குறைப்பதாக ட்விட்டரில் பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் கடந்த 5ம் தேதி நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

பேஸ்புக் பெயர் மாற்றம்! மார்க் அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதுமே இந்த திடீர் வேலை நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மீண்டும் முடங்கியது பேஸ்புக்! பயனர்கள் அவதி!

இப்படி ஒரேயடியாக 11,000 பேர் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கு, எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறினார்.  இப்படி திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web