குழந்தை பெறுவதற்கு மனித எலும்பு பொடியை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார் !!

 
marriage

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் உடன் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து சில காலம் இளம் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் சில இடங்களில் மருத்துவ சிகிச்சைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்கும் மேலாக அப்பெண்ணை கணவரும், மாமியாரும் செய்த கொடுமைகள் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, குழந்தை இல்லாத மருமகளை உள்ளூர் சாமியாரின் அறிவுரைப்படி மனித எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை சாப்பிடும்படி அவரது மாமியார் மற்றும் கணவர் கட்டாயப்படுத்தி உள்ளனர். 

marriage

இதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது மாமியார், கணவர் கொங்கன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் "அகோரி" பயிற்சியில் ஈடுபட கட்டாயப்படுத்தினர்.

marriage

ஒரு கட்டத்தில் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத மருமகன், சிங்காட் காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக கணவர், மாமியார் மற்றும் சாமியார் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம், அதன் பிறகே சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கூறினர்.  
 

From around the web