எனக்குப் பிடிச்ச விளையாட்டு! செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 
ரஜினி செளந்தர்யா ஐஸ்வர்யா

எனக்குப் பிடிச்ச விளையாட்டு... செஸ்  ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இதனை . பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இன்று தொடங்கும் இந்த போட்டிகள் வருகிற ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

செஸ்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை தொடர்ந்து  சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வதால் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தார். டீசரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றிருந்தார். இதற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில்‘ ‘‘நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். அனைத்து செஸ் மனங்களுக்கும் மிகவும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழகம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web